• Skip to Main Content
  • Skip to Navigation
  • Text Size Reduce Font Size Reset font size Reduce Font Size
  • Contarst Display
  • Normal Display

DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE
DISTRICT INDUSTRIES CENTRE, THENI DISTRICT

Global Investor Meet 2019

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2019

தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சட்ட ஒழுங்கு சூழ்நிலை தடையற்ற மின்சாரம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு பல சர்வதேச விமான நிலையங்கள் பன்முக துறைமுகங்கள் மற்றும் திறன் மிக்க மனித ஆற்றல் ஆகியவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்கி வருகின்றன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது அந்த மாநாட்டில் 50.51 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதல் மாநாட்டிற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்திற்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக 200 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படியே தொழில் துறையினரை அதிகம் முதலீடு மேற்கொள்ள செய்வதற்காக தொழில் துறையினருடன் இணைந்து முயற்சித்து வருகின்றனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் தமிழ்நாடு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் பொருட்காட்சி நடக்க உள்ளன மாநாட்டின்போது தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

தொழில் முனைவோர் உருவாக இது ஒரு சரியான தருணம் தொழில் முதலீடு செய்யும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் தயாரித்து தொழில் மைய பொது மேலாளர் உடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப பதிவு பரிசீலனை, வங்கிக் கடன் என அனைத்து நடவடிக்கையும் ஆன்லைன் மூலமாக மட்டும் மேற்கொள்ளப்படும் .

மாவட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டை பயன்படுத்தி தொழில் துறையில் கால் பதிக்கலாம் தொழில் முனைவோர் உருவாக இது சரியான தருணம் என்பதால் தேனி மாவட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Digital India Programme

National E-Governance Division (NEGD)

BHIM (Bharat Interface for Money) is a Mobile App developed by National Payments Corporation of India

Directorate General of Foreign Trade (DGFT)

The Unique Identification Authority of India (UIDAI)